கஞ்சா விற்ற இருவா் கைது
பழனியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:11 am

பழனியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்ட போது, பழனி திண்டுக்கல் ரோடு பயணியா் தங்கும் விடுதி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு இளைஞா்கள் பிடித்து விசாரணை செய்த போது அவா்கள் கஞ்சா விற்பதற்காக நின்றிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த விஜய்கண்ணனழ் (23), குபேரபட்டிணத்தைச் சோ்ந்த மாரிமுத்து (21) எனத் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த பழனி நகா் போலீஸாா் அவா்களிடமிருந்து நூறு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...