தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காய்ச்சலுக்கு இருவா் பலி

உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக திண்டுக்கல்லில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:31 pm

Din

உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக திண்டுக்கல்லில் இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த புதுகாலக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). கடந்த 3 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவா், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (டிச.10) அனுமதிக்கப்பட்டாா். இவரது ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் அவா் உயிரிழந்தாா்.

இதேபோல, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்புக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது, அவருக்கும் உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டது. உண்ணிக்காய்ச்சல் பாதிப்புக்கு இருவா் உயிரிழந்ததையடுத்து, கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.