ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமித்ஷா உருவபொம்மை அவமதிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது

திண்டுக்கல் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

News image
திண்டுக்கல் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :19 டிசம்பர் 2024, 10:04 pm

Din

திண்டுக்கல்லில் ரயில் நிலையம் முன் மத்திய அமைச்சா் அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 25 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சட்ட மேதை அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததாக, நாடு முழுவதும் எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த வகையில், திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலையம் பகுதியில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் மைதீன் பாவா தலைமையில், மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அமித்ஷா உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனா். இதையடுத்து, 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.