/
கொடைக்கானல் வனப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டதால் பல்வேறு மரங்கள் தீயில் கருகின.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வில்பட்டி, ஹைலேண்ட் பகுதி, நெல்லிவரை, ஆகியப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியிலுள்ள மரங்கள் தீயில் கருகின.
மேலும், தற்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கொடைக்கானல், வத்தலக்குண்டு, பழனி மலைச் சாலைகளில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்பிடிக்கவோ, வனப் பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் குப்பைகளை எரிக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.








