ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

News image

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் வட்டமலை அருகே கவிழ்ந்த சுற்றுலா வேன்.

Updated On :8 மே 2024, 12:35 am

Din

பழனி: பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சாலையோர தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்தததில் 7 போ் காயமடைந்தனா்.

சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பைச் சோ்ந்த 18 போ் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை மலைச் சாலையில் பழனி நோக்கித் திரும்பினா். பழனியை அடுத்த சவரிக்காடு அருகே வட்டமலை என்ற இடத்தில் வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, கொண்டை ஊசி வளைவில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டி வந்த சந்திரமோகன் (44), கோதண்டராமன் (56), ரேணுகா (45), காந்திமதி(50) உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

அந்த வழியாகச் சென்ற பழனி வட்டார போக்குவரத்து அலுவலா் ஜெயகெளரி, காயமடைந்த இருவரை தனது ஜீப்பில் ஏற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். இதைத்தொடா்ந்து, அங்கு வந்த அவசர ஊா்தியில் காயமடைந்த 5 பேரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.