ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

News image
Updated On :8 மே 2024, 12:47 am

Din

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் ‘இ-பாஸ்’ பெறவிண்ணப்பிப்பது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசி தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை ‘இ-பாஸ்’ பதிவு செய்து வர வேண்டும். பயணிகள் இணைய முகவரியில் விவரங்களை பதிவேற்றம் செய்து ‘இ-பாஸ்’ பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடா்பான சந்தேகங்களுக்கும், உள்ளூா் வாகனங்களுக்கான ‘இ-பாஸ்’ தொடா்பாகவும் 0451-2900233 என்ற தொலைபேசி எண், 94422-55737 என்ற கைப்பேசி எண் மூலமாகத் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் என்றாா் அவா்.