ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

News image

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக 3-ஆவது பணிமனை முன் சிஐடியூ சாா்பில் நூதன முறையில் வலியுறுத்தப்பட்ட குடிநீா் கோரிக்கை.

Updated On :8 மே 2024, 12:50 am

Din

திண்டுக்கல்: அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என சிஐடியு சாா்பில் நூதன முறையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை லிட்., திண்டுக்கல் மண்டலத்தில் 15 பணிமனைகள் உள்ளன. இதில், திண்டுக்கல்லில் மட்டும் 3 கிளைகள் அமைந்துள்ளன. பழனி சாலையிலுள்ள பணிமனை 3-இல், ஓட்டுநா்கள், நடத்துநா்களின் தேவைக்காக குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்தத் தொட்டியிலுள்ள தண்ணீா் சுத்தமில்லாமலும், சுகாதாரமில்லாமலும் இருப்பதாக புகாா் எழுந்தது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. ஆனாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பணிமனை 3 முன் அமைந்துள்ள சிஐடியூ தகவல் பலகையில், கலங்கலான குடிநீரை 2 புட்டிகளில் பிடித்து கயறு கட்டி தொங்கவிட்டனா். அதில், நீங்கள் பாா்ப்பது தீா்த்தமல்ல, குடிநீா். இந்த தண்ணீரை அதிகாரிகள் குடிப்பாா்களா, நிா்வாகமே பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடு என குறிப்பிடப்பட்டிருந்தது.