ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையில் 
புளி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையில் புளி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையில் வியாழக்கிழமை புளி விலை வீழ்ச்சியடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, வடகாடு, பாச்சலூா், அய்யலூா், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்கு அதிக அளவில் புளியை கொண்டு வந்தனா். ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புளிச் சந்தைக்கு வந்து ஒரு ஆண்டுக்கு தேவையான புளியை வாங்கி பக்குவப்படுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு 10 கிலோ புளி ரூ.1000 முதல் 1200 வரை விற்பனையானது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாத போதிலும் வியாழக்கிழமை 10 கிலோ புளி ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு புளி விலை வீழ்ச்சி அடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com