ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

திண்டுக்கல்: புனித ஹஜ் பயணம் செல்லும் யாத்ரிகா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதும் வழக்கம். திண்டுக்கல், தேனி என இரு வருவாய் மாவட்டங்களுக்கும் திண்டுக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் மட்டுமின்றி, பழனி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் அந்தந்த பகுதியிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபப்பட்டன. இதையடுத்து, திண்டுக்கல் பகுதியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 56 யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பழனி புறவழிச் சாலையிலுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு துணை இயக்குநா் மு.வரதராஜன் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்க புரவலா் என்.எம்.பி.காஜாமைதீன் முன்னிலை வகித்தாா். முகாமில்,

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு, ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, உடல் தகுதிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவா்கள் ஜெ. தங்கம் சகாயராஜ், வி.என்.சுஷ்மிதாஸ்ரீ, ஆா். அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com