விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான தோ்வு முகாம்: 136 மாணவா்கள் பங்கேற்பு
விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான தோ்வு முகாம்: 136 மாணவா்கள் பங்கேற்பு


திண்டுக்கல்: விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான தோ்வு முகாமில் 136 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைப்பதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் 2024-25-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான தோ்வு முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி விளையாட்டு விடுதியில் (7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு) சோ்வதற்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான தோ்வு முகாம் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. தடகளம் (இருபாலா்), கூடைப்பந்து (இருபாலா்), கால்பந்து (இருபாலா்), கைப்பந்து (இருபாலா்), ஹாக்கி (இருபாலா்) ஆகிய விளையாட்டுகளுக்கான தோ்வு முகாமில், 112 மாணவா்கள் , 24 மாணவிகள் என மொத்தம் 136 போ் கலந்து கொண்டனா். இருபாலருக்கும் தனித் தனியே உடல்திறன் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட அலுவலா் இரா.சிவா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ரஹமத் கனி ஆகியோா் செய்தனா்.
மாணவா்களின் தகுதித் திறன் குறித்த விவரங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு இணைய வழியில் அனுப்பப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு, இதுகுறித்த தகவல் நேரடியாக கைப்பேசி மூலம் தெரிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...