போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: போக்சோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மதன்குமாரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி கே.கருணாநிதி குற்றஞ்சாட்டப்பட்ட மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதன் மூலம், 2024 ஜனவரி முதல் தற்போது வரை 22 போக்சோ வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com