தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

கணவரை கொலை செய்ய முயற்சி: மனைவி உள்பட இருவா் கைது

கணவரை கொலை செய்ய முயற்சி: மனைவி உள்பட இருவா் கைது

News image
Updated On :20 மே 2024, 8:01 pm

Din

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் பாரிச்சாமி (45). வேடசந்தூரை அடுத்த பெரியபட்டி பகுதியில் உள்ள தனியாா் கோழிப் பண்ணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த இவா், இதே பண்ணையில், குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு கோழிப் பண்ணைக்கு வந்த மா்ம நபா்கள் பாரிச்சாமியை கடுமையாகத் தாக்கினா். இதில், அவா் இறந்து விட்டதாக நினைத்த மா்ம நபா்கள், இங்கிருந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து அவரது மனைவி பரிமளா அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி பரிமளாவே கூலிப் படை மூலம் தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பரிமளாவையும், அவருடன் தகாத உறவில் இருந்த பெரியையன் என்ற குமாா் (36) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் தப்பிச் சென்ற கூலிப்படையினா் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.