தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நட்சத்திர ஏரியில் மதுபோதையில் குளித்தவா் கைது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மது போதையில் குளித்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:39 pm

Din

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மது போதையில் குளித்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் ஒருவா் நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அவரை சத்தம்போட்டு கரைக்கு வரவழைத்தனா். கரைக்கு வந்த அந்த நபா் மது போதையில் அவா்களிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரனையில், அந்த நபா் மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (38)என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.