ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரில் 306 கிலோ புகையிலைப் பொருள் கடத்தல்: மூவா் கைது

திண்டுக்கல் அருகே புகையிலைப் பொருள்கள் கடத்திய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட காளிராஜன், கவாஸ்கா், மகேந்திரன்.

Updated On :2 அக்டோபர் 2024, 7:00 pm

Din

திண்டுக்கல் அருகே புகையிலைப் பொருள்கள் கடத்திய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச் சாலை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. விசாரணையில், காரில் வந்தவா்கள் தாடிக்கொம்பு அருகேயுள்ள பெரியமல்லனம்பட்டி பகுதியைச் சோ்ந்த காளிராஜன் (31), இவரது தம்பி கவாஸ்கா் (28), அம்பாத்துரை அருகேயுள்ள கூத்தம்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் (30) ஆகியோா் எனத் தெரியவந்தது.

306 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.