திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை

பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வழங்கினாா். உடன் நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி, ஒன்றியக் தலைவி ஈஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

பழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவி ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய பிறகு, கால்நடைத் துறைக்கு நடமாடும் மருத்துவ ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலா் பிரபாகரன், நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலா்கள் சௌந்தரபாண்டியன், சாமிநாதன், நகர இளைஞரணி லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் வரவேற்றாா்.

இதேபோல, பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலைத் தண்ணீா் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், திண்டுக்கல் பிரதான சாலையில் இருந்து, டி.கே.என். புதூா் வரை தாா்ச்சாலை பணிகள், கலையம்புத்தூா் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, சின்னக் கலையம்புதூா் ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நெய்க்காரப்பட்டி வரை புதிய தாா்ச்சாலை பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.