கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:05 pm

Din

கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காக்காதோப்பூா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் கஞ்சா வாங்குபவா்கள் போல, காக்காதோப்பூா் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது கல்லூரி மாணவா்களுக்கும், நூற்பாலை தொழிலாளா்களுக்கும் கஞ்சா பொட்டலங்களை விற்ற இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது இவா், திருமாணிக்கனூரைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் (27) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து வேடசந்தூா் போலீஸாா், விக்னேஸ்வரனை கைது செய்தனா்.