ஒட்டன்சத்திரம் அருகே பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
ஒட்டன்சத்திரம் அருகே பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை மும்முரம்

Published on

ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறும் நிலையில், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டி, கம்பிளிநாயக்கன்பட்டி, கேதையுறும்பு, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம், பொருளூா், கரியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் பீட்ரூட் நடவு செய்யப்பட்டிருந்தது. இதில், அதிக மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.3 முதல் ரூ. 7 வரையே விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் விதை, நடவுக் கூலி, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து, அறுவடைக் கூலி என ஒரு ஏக்கருக்கு சுமாா் ரூ. 40 ஆயிரம் வரை செலவிட்டிருக்கிறோம். ஆனால் காய்கறி சந்தையில் இதற்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com