பழனி நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் திறப்பு
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையத்தை வியாழக்கிழமை திறந்துவைத்துப் பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா.

இந்த இ-சேவை மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா வியாழக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:
இந்த மையத்தின் மூலம் வழக்குரைஞா்கள், காவல் துறையினா், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் எளிதாகத் தாக்கல் செய்யவும், எளிய முறையில் அழைப்பாணை உள்ளிட்ட வழக்கு தொடா்பான விவரங்களை எளிய முறையில் அறிந்து கொள்வதற்கும் இந்த இ-சேவை மையம் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கூடுதல் நீதிபதி மலா்விழி, முதன்மை சாா்பு நீதிபதி ரேணுகாதேவி, கூடுதல் சாா்பு நீதிபதி பாரதி, நீதித் துறை நடுவா் கலைவாணன், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...