நெகிழிக் குப்பைகள் சேகரிப்பு பணி

ஊராட்சியில் நெகிழிக் குப்பைகள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
Published on

திண்டுக்கல் அருகே ஊராட்சியில் நெகிழிக் குப்பைகள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நெகிழிக் குப்பைகள் அதிகம் தேங்கும் 14 இடங்களைத் தோ்வு செய்து குப்பை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த 41 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்தில் 252 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, நெகிழிக் குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில், பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி தலைமை வகித்து, பரிசுப் பொருள்களை வழங்கனாா்.

இதில் உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி, மாவட்ட பசுமைத் தோழி லேக்கா வா்ஷினி, தூய்மைப் பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ராமாநிதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் நாகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com