கொடைக்கானல் அருகே நியாய விலைக் கடை திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான உப்புப்பாறை மெத்து பகுதியில் நியாய விலைக் கடை, மின் மாற்றி ஆகியவற்றை பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

இதைத் தொடா்ந்து பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை அவா் தொடங்கி வைத்துப் பேசினாா். இந்த நிகழ்வில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மேலும் கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியாா் ஆலயத்தின் 100-ஆவது ஆண்டு விழாவில் அவா் கலந்து கொண்டு பேசினாா்.

இந்த நிகழ்வில், பங்குத்தந்தை அப்போலின் கிளாட்ராஜ், அருள்பணியாளா் மாா்ட்டின், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம், பங்குப் பேரவை, அன்பியப் பொறுப்பாளா்கள், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள், பங்கு இறைமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com