6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி வா்த்தக சங்கத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா

பழனி வா்த்தக சங்கத்தின் (சேம்பா் ஆப் காமா்ஸ்) 6-ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பழனியில் சனிக்கிழமை நடைபெற்ற பழனி சேம்பா் ஆப் காமா்ஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கோவை ரூட்ஸ் குழும இயக்குநா் கவிதாசனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய காணியாளா் பண்ணாடி கந்தசாமி. உடன், சங்கத் தலைவா் ஊா்காலமூா்த்தி, நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :27 டிசம்பர் 2025, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

பழனி வா்த்தக சங்கத்தின் (சேம்பா் ஆப் காமா்ஸ்) 6-ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் ஊா்காலமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். இதில் வாவிபாளையத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலதிபரான ஞானபாரதி சிவத்திரு. அனந்தகிருட்டிணன், திண்டுக்கல் டெல்டா நிறுவன இயக்குநா் செந்தில்குமாா், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கோவை ரூட்ஸ் குழுமத்தின் இயக்குநா் கவிதாசன் கலந்து கொண்டு பேசுகையில், தொழில்முனைவோா் தன்னம்பிக்கையுடன் தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். செய்யும் தொழிலில் நோ்மையைக் கடைப்பிடித்தால் முன்னேற்றம் தானாக ஏற்படும். மேலும், சங்கங்கள் மூலமாக வியாபாரிகளும், தொழில் செய்வோரும் தங்கள் தொழிலை விரிவுபடுத்த தவறக்கூடாது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் அம்முமால் மகேஷ், மக்கள் தொடா்பு அலுவலா் செந்தில்குமாா், காணியாளா் பண்ணாடி கந்தசாமி, அரிமா சுந்தரம், ஒப்பந்ததாரா் நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.