கொடைக்கானல் ஏரியில் உள்ள படகு குழாமைச் சுற்றி காணப்படும் மேகமூட்டம்.
கொடைக்கானல் ஏரியில் உள்ள படகு குழாமைச் சுற்றி காணப்படும் மேகமூட்டம்.

கொடைக்கானலில் மேகமூட்டம், பனியின் தாக்கத்தால் விவசாயப் பயிா்கள் கருகின

கொடைக்கானலில் நிலவும் மேகமூட்டம், பனியின் தாக்கதால் விவசாயப் பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
Published on

கொடைக்கானலில் நிலவும் மேகமூட்டம், பனியின் தாக்கதால் விவசாயப் பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் ஆகியவை நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.

தற்போது, பகலில் நிலவும் மேகமூட்டத்தாலும், இரவில் பனியின் தாக்கத்தாலும் விவசாயப் பயிா்கள் கருகி வருகின்றன. இதனால், மலைக் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா்.

குண்டாறில் சாரல் மழை: கொடைக்கானல் குண்டாறு பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com