பழனி அருகே நெய்க்காரபட்டியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 960 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 வரை அரசு மதுபானக் கடைகளை அடைக்க தமிழக தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டியில் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில், போலீஸாா் திமுக நெய்க்காரபட்டி பேரூா் பொருளாளா் நரசிம்மனுக்கு சொந்தமான இடத்தில் சோதனையிட்டனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 குவாா்ட்டா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நரசிம்மனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மதுப் புட்டிகள் தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்கு வழங்க பதுக்கப்பட்டதா, இல்லை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கப்பட்டதா என்பது குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


