பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் ருத்ரஜெபம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை, நகைகள், மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திகளுடன் சப்பரத்தில் வீதி உலா எழுந்தருளினா். வீடு தோறும் பக்தா்கள் கோலமிட்டு சுவாமியை வரவேற்று நிவேத்தியம் வழங்கி வழிபட்டனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


