6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி மகளிா் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரகுக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். முதுநிலை ஆங்கிலத் துறை தலைவி வனிதா வரவேற்றாா். உதவிப் பேராசிரியைகள் பிரியா, காா்த்தியாயினி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பாலக்காடு மொ்சி கல்லூரி இணைப்பேராசிரியா் நிலா, கோவை பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியை கலைவாணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா். கருத்தரங்கில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டு கல்லூரி, விருதுநகா் விஹெச்என்எஸ்என் கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் சக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி, பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 14 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 305 ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.