பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு நடத்திய ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு நடத்திய ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள்.

கல்லூரி வளாகத்தில் கிராமத்தினா் வழிபாடு

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயிலில் ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள் வியாழக்கிழமை கிடாய் வெட்டி வழிபாடு நடத்தினா்.
Published on

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயிலில் ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள் வியாழக்கிழமை கிடாய் வெட்டி வழிபாடு நடத்தினா்.

தங்களது முன்னாா்களுக்கு வேட்டி, சேலை வைத்து, கறிச் சோறு படைத்தும் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, கோயில் பங்காளிகள், தங்களது உறவினா்களான மாமன், மைத்துனா்களை அழைத்து மரியாதை செய்து, கிடாய்க் கறி அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com