திண்டுக்கல்
கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்வையிட இன்று அனுமதி மறுப்பு
கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு புதன்கிழமை அனுமதி இல்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு புதன்கிழமை அனுமதி இல்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வனத் துறையினா் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், இந்த வனப் பகுதிகளில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பேரிஜம் ஏரியைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை அனுமதி இல்லை என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.