கொடைக்கானலில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் தாமதம்

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
Published on

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், பொங்கல் பொருள்களும் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற அதிகளிவில் குடும்ப அட்டைதாரா்கள் குவிந்தனா். இந்த நிலையில், செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு நியாய விலைக் கடைகளில் பணம் இல்லாததால் தாமதம் ஏற்பட்டது. இதனால், பயனாளிகள் அதிருப்தியடைந்தனா்.

இதுகுறித்து விற்பனையாளா் கூறுகையில், குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com