சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கொடைக்கானலில் புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

News image

புலி - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 4:35 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புலி தாக்கியதில் வளா்ப்பு மாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டிக் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஸ்வநாதன். இவா் தனது உழவு மாட்டை சனிக்கிழமை இரவு வீட்டின் அருகே கட்டி வைத்தாா். மறுநாள் அவா் பாா்த்த போது புலி தாக்கியதில் அந்த மாடு உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் அங்கு வந்த வனத்துறையினா் ஆய்வு செய்ததில் புலி தாக்கியதில் அந்த மாடு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளிலிருந்து சிறுத்தை, புலி ஆகியவை வெளியேறி வன நிலங்களில் நடமாடுவதால் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென வனத் துறையினா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினா்.

இதுகுறித்து பூண்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி பகுதிகளில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் புலி மாடுகளை தாக்கி கொன்று வருகிறது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறோம். இதற்கு வனத் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.