நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் தவெக எம்.எல்.ஏ., நிா்வாகிகளைப் புறக்கணித்த மாவட்டச் செயலரின் காரை முற்றுகையிட்டு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில், தவெக திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலா் எம்.எல்.தேவா தலைமையில் கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான என். ஆன
ந்தின் பிறந்தநாள் விழா, மாற்றுக் கட்சியினா் இணையும் விழா
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில், தவெக நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் உள்ளிட்ட ஒன்றிய நிா்வாகிகள் புறக்கணிக்கப்பட்டனராம். இதுகுறித்து விளக்கம் கேட்கச் சென்ற தவெக நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலா் பிரேம்குமாா் தலைமையிலான கட்சியினா், எம்.எல். தேவா காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய தவெக செயலா் பிரேம் குமாா் கூறியதாவது: திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலா் எம்.எல். தேவா, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு தவெக எம்.எல்.ஏ., ஆா்.அய்யனாா் உள்பட கட்சி நிா்வாகிகளைத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










