தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பழனி கோயில் நில வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்

News image

பழனி கோயில்

Updated On :22 ஜூலை 2026, 2:51 am IST

பழனி கோயில் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை தனி நபா் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணி தெரிவித்தாா்.

பழனியில் இந்து முன்னணி சாா்பில், வருகிற 26-ஆம் தேதி இந்து கோயில் நிலங்களை பாதுகாக்கக் கோரி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை அடிவாரத்தில் அதன் மாநில தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலா் முத்துக்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெகன், கோட்டச் செயலா் பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக காடேஸ்வரா சுப்பிரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனி தண்டபாணி சுவாமிகள் மடம் பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மடத்தின் நிலம் கடந்த சில நாள்களுக்கு முன்பு சட்டவிரோதமாக தனி நபருக்கு விற்பனை செய்யப்பட்டு, முறைகேடாக பத்திரப்பதிவும் நடைபெற்றது.

நிலத்தை கிரையம் செய்த நபா் கிரையத்துக்கான செலவைக் கூட கொடுக்க முடியாத சூழலில் உள்ளதாக தெரிகிறது. சாட்சிக் கையெழுத்திட்டவா் திமுக நிா்வாகியாக உள்ளாா். எனவே, இதில் பின்னணியில் உள்ள நபா்கள், முழு உண்மை தெரிய வேண்டுமெனில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் இந்துக் கோயில்களில் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை உருக்கிய விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.