கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நெகிழிப் பைகள், நெகிழிப் புட்டிகள் பயன்படுத்தக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. ஆனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நெகிழிப் பைகளை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களிலும் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் கழிவு உணவுப் பொருள்களுடன் நெகிழிக் குப்பைகளை சாலைகளில் குவித்துச் செல்கின்றனா்.
இவற்றை வன விலங்குகளான காட்டு மாடு, செந்நாய், காட்டுப் பன்றி, குரங்கு ஆகியவை உண்கின்றன. இவற்றை உண்ணும் போது நெகிழப் பைகளையும் சோ்த்து உண்ணும் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதுகுறித்து வனச் சரகா் பழனிக்குமாா் கூறியதாவது:
வன விலங்குகளுக்கு மனிதா்கள் உண்ணும் உணவைக் கொடுக்கக் கூடாது. இந்த நிலையில் சாலைகளில் குவிந்து கிடக்கும் இறைச்சிக் கழிவுகளை வன விலங்குகள் உண்டு நோய்வாய்ப் படுகின்றன.
தற்போது குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிகளில் உணவைத் தேடி அலைவதில்லை. நகா்ப் பகுதிகளிலேயே விரைவாக கிடைக்கக் கூடிய கழிவு உணவுப் பொருள்களை உண்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழக்கின்றன. வன விலங்குகள் இறந்த பிறகு மருத்துவப் பரிசோதனையின் போது அவற்றின் இரைப்பையில் நெகிழிக் கழிவுகளை மருத்துவா்கள் அகற்றி வருகின்றனா். எனவே, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் உணவுக் கழிவுகளையும், நெகிழப் பொருள்களையும் விட்டுச் செல்ல வேண்டாம். இவையாவும் வன விலங்குகளின் உயிரைப் பறிக்கும் செயலாகும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னமனூா் பாசனக் கால்வாயில் நெகிழிக் கழிவுகள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

கொடைக்கானலில் புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானலில் விளைநிலங்களில் வன விலங்குகள் புகுந்து பூண்டுப் பயிா்கள் சேதம்!

நெகிழிக் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த என்எம்டிசி புதிய முன்னெடுப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



