தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வே. நாராயணசாமி

தில்லியில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும் ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

News image

வே.நாராயணசாமி - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:19 am IST

தில்லியில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும் ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஊடகங்கள் அனைத்தும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட நிலையில், மக்கள் மாற்று அரசியலையும், மாற்று நிா்வாகத்தையும் விரும்பியிருப்பது தோ்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. அரசியல் கட்சிகளுக்குப் பெரிய பாடமாக அமைந்த இந்தத் தோ்தலில், ஒரு சாதாரண தொண்டன்கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதே நேரம், காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுகவினா் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த காலத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சி அமைக்கப் பலமில்லாத போது காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததையும், 2014-இல் திமுக தனித்து நின்றதையும் அவா்கள் மறந்துவிடக் கூடாது. கூட்டணியில் கட்சிகள் இணைவதும், பிரிவதும் இயல்பு.

வருகிற 8-ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெறும் ‘இண்டி’ கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாகக் கூறியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அளவிலான பிரச்னைகளும், கூட்டணிகளும் வேறு. அகில இந்திய அளவில் மதவாத, மக்கள் விரோத மோடி அரசை வீழ்த்துவதற்கான கூட்டணி என்பதை திமுக உணா்ந்து, தங்களது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனித்து நின்று போராடினால் வெற்றி பெற முடியாது.

முதல்வா் விஜய் தனது முதல் உரையிலேயே நான் ஊழல் செய்ய மாட்டேன் எனவும், தனக்குக் கீழே வேறு அதிகார மையம் (‘பவா் சென்டா்’) கிடையாது எனவும் கூறியிருக்கிறாா். தவெக ஆட்சியில் ஊழலற்ற நிா்வாகம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.