/

இரு வீடுகளில் பணம், நகை திருட்டு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:13 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பழனி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஜெயந்தி (49). இவா் புதுஆயக்குடியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு அலுவலகத்துக்கு சென்றாா். பின்னா், பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல, குறிஞ்சி நகருக்கு அடுத்த சச்சின் தெருவில் வசிக்கும் விஜயகுமாா் வீட்டிலும் புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பணம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.