பழனி அருகே 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருபவா்களை வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி பூஞ்சோலை கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் பட்டியலின மக்களுக்கு, நில உச்சவரம்பு சட்டதால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த நிலத்தை சிலா் தங்களது நிலம் எனக் கூறி, வெளியேற்றி முயற்சி செய்து வருகின்றனா். இதனால், வாழ்வாதாரம் வேண்டி செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தனா்.
இதுகுறித்து வழக்கறிஞா் சங்கத் தலைவா் மணிக்கண்ணன் கூறியதாவது:
இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருபவா்களை சிலா் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனா். சம்பந்தப்பட்ட நபா்களிடம் எந்த முறையான ஆதாரங்களும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது என்றாா்.
தொடர்புடையது

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தஞ்சாவூரில் 8 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு

திருக்குறுங்குடி காவல் முற்றுகை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


