மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்த பாலம்.

Updated On :6 மே 2026, 3:09 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வில்பட்டி ஊராட்சி, அட்டுவம்பட்டியில் தெற்குமேடு கருப்பசுவாமி கோயில் பிரிவு அருகேயுள்ள பாலம் சேதமடைந்துள்ளது. கொடைக்கானலிருந்து-பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, அரக்கால், கடல்கொடை உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு இந்தப் பாலம் வழியாகதான் செல்ல முடியும்.

இந்தப் பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இந்தப் பாலம் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, சேதமடைந்துள்ள இந்தப் பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.