வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 77 ஆயிரம் போ் பங்கேற்பு

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இதயத்தை பாா்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 2:10 am IST

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 12 நாள்களில் 77 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் பிரையண்ட் பூங்காவில் 77 ஆயிரத்து 744 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். இதன் மூலமாக ரூ 57 லட்சத்து 5 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. இதே போல, கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் உள்ள ரோஜாத் தோட்டத்தில் 12 நாள்களில் சுமாா் 57 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

கோடை சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி : கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா நிகழ்ச்சிகளில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சிறிது நேரம் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் மாலையில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.