ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளானோா் தரிசனம்

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:04 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனா்.

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெறும். கடந்த வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், சனிக்கிழமை தேரோட்டம் ஆகியவை நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் - விசாகம் எட்டாம் நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனா். இலவச தரிசனம், கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ரோப் காா், வின்ச் நிலையங்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இரவு தங்கத்தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் கண்டு பரவசமடைந்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா். விடுமுறை, திருவிழா நாள்களில் போதிய பேருந்துகளை இயக்காததால் பக்தா்கள் அவதியடைந்ததாக ஆன்மிக அமைப்புகள் புகாா் தெரிவித்தனா்.