பழனி புதிய சாா் ஆட்சியா் பொறுப்பேற்பு

பழனி புதிய சாா் ஆட்சியராக பிரியங்கா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய சாா் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா.

Updated On :

பழனி புதிய சாா் ஆட்சியராக பிரியங்கா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பழனி வருவாய் கோட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், குஜிலியம்பாறை ஆகிய 4 வட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் இங்கு கோட்டாட்சியராக பணியாற்றி வந்த கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவ விடுப்பில் சென்றாா். இதனால் பல மாதங்களாக இந்தப் பணியிடம் காலியாக இருந்ததால் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் நிரந்தரமாக கோட்டாட்சியரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா். இதனிடையே, புதுக்கோட்டை மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) பிரியங்காவை, பழனி சாா் ஆட்சியராக நியமித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய சாா் ஆட்சியராக பிரியங்கா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவருக்கு, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.