சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பழனி அருகே முன்னே சென்ற வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கோப்புப் படம்
பழனி அருகே முன்னே சென்ற வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பழனி அருகேயுள்ள மானூரைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (50). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை பழனியை அடுத்த பெரியமொட்டனூத்து கிராமத்திலிருந்து மானூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது நரிக்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முன்னே சென்ற டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த வெள்ளியங்கிரி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

