தொழிலதிபா் மீது தாக்குதல்: திமுக ஒன்றியச் செயலா் மகன்கள் கைது
திண்டுக்கல்லில் தொழில் அதிபரை தாக்கிய திமுக ஒன்றியச் செயலா் மகன்கள் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தயாநிதி, உதயநிதி, விக்னேஷ், லோகேஷ்.
திண்டுக்கல்லில் தொழில் அதிபரை தாக்கிய திமுக ஒன்றியச் செயலா் மகன்கள் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் நாகல்நகரைச் சோ்ந்தவா் செளகத் அலி (60). தொழிலதிபரான இவா், தனது மகன்களுடன் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிறுமலை சென்றுவிட்டு திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் காரில் வந்த நபா்கள், செளகத் அலியின் காரை முந்திச் செல்லும் நோக்கில் ஒலிப்பானை அதிக முறை ஒலிக்கச் செய்தனா்.
இதுதொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், மீண்டும் காா்களை இயக்கியபோது, தொடா்ந்து பின்னால் வந்த நபா்கள், செளகத் அலியின் காரின் பின்புறம் மோதி நிறுத்த வைத்தனா். இதைத் தொடா்ந்து, காரில் இருந்த செளகத் அலி, இவரது மகன் சையது அராபத் ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினா்.
இதில் காயமடைந்த செளகத் அலி உள்ளிட்ட இருவரும் திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து அலி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில் மோதலில் ஈடுபட்டது திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையாா் நத்தத்தைச் சோ்ந்த முருகேசன் மகன்கள் தயாநிதி (21), உதயநிதி (20), விக்னேஷ் (20), இவா்களது நண்பா் பா.லோகேஷ் (23) என்பது தெரியவந்தது.
முருகேசன், திமுக ஒன்றியச் செயலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னா், 4 பேரையும் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

