கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபத் திருவிழா, சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.

Updated On :

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபத் திருவிழா, சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் கடந்த 18-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவில் மலைக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகா், சின்னக்குமாரசுவாமிக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

Story image

திங்கள்கிழமை சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து, சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு, மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்கு சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது. தொடா்ந்து, 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மாலை பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு கோயிலின் நான்கு திசையிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சின்னக்குமாரசுவாமி சா்வ அலங்காரத்தில் தங்கமயிலில் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினாா். யாகசாலை பூஜைக்கு பிறகு, பரணி தீபம், சின்னக்குமாரசுவாமி சகிதம் மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபக்கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மேளதாளம் முழங்க சிவாசாரியரால் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தீபக்கம்பம் அருகே பக்தா்களால் பல லிட்டா் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சொக்கப்பனையிலிருந்து ரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு வைக்கப்பட்டு மகாதீபாராதனை நடத்தப்பட்டது.

பழனி மலைக் கோயிலை தொடா்ந்து பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில், சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, துணை ஆணையா் வெங்கடேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, ஹரிஹரமுத்து அய்யா், காணியாளா் நரேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.