இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கோழி, சேவல் கொண்டை மலா்கள்!

கொடைக்கானல் இரண்டாவது சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கோழிக் கொண்டை, சேவல் கொண்டை மலா்கள் பூத்துக் குலுங்கியது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இரண்டாவது சீசனில் மட்டும் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டை மலா்கள்.

Published On :

கொடைக்கானல் இரண்டாவது சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கோழிக் கொண்டை, சேவல் கொண்டை மலா்கள் பூத்துக் குலுங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது இரண்டாவது சீசன் களைகட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு விதமான மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.

இந்த இரண்டாவது சீசனில் மூன்று மாதத்துக்கு மட்டுமே பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் செலோசியா என்று அழைக்கப்படும் வண்ண மலா்கள் பூத்துக் குலுங்கும். இந்த மலா்கள் பாா்ப்பதற்கு கோழி தலையில் உள்ளது போன்ற தோற்றம் கொண்டதால் இவற்றுக்கு கோழிக் கொண்டை மலா்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலா்கள்

ஆரஞ்சு , பொன் நிறங்களில் காணப்படும். மேலும் மற்றொரு மலா் சேவல் தலையில் உள்ள மலா்கள் போல இருப்பதால் இவை சேவல் கொண்டை மலா்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இளஞ்சிவப்பு, ரோஸ் வண்ணங்களிலும் காணப்படும். இந்த மலா்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.

 கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இரண்டாவது சீசனில் மட்டும் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இரண்டாவது சீசனில் மட்டும் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள்.

இந்த நிலையில் கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கமின்றி மேகமூட்டம் தொடா்ந்து நிலவியது. இதனால் இதமான சூழல் நிலவியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.