லவ்டேல் பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

உதகை காந்தி நகா் மலைப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

லவ்டேல் பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்.

Updated On :

உதகை காந்தி நகா் மலைப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு சிறப்பு மலராக குறிஞ்சி மலா் உள்ளது. இது  மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில்  வளா்கிறது.  பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலா் அதிக அளவில் பூக்கும். இது நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். குறிஞ்சி மலா் பூக்கும் காலத்தில் மலைப் பகுதிகள் அழகாக நீல நிறத்தில் காட்சியளிக்கும். 

சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் மற்றும் குறிஞ்சி மலருக்கு முக்கியமான இடம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குறிஞ்சி மலா்கள் தற்போது, நீலகிரி மாவட்டம் உதகை காந்தி நகா் மலைப் பகுதியில் பூத்துள்ளன.

தற்போது பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்களை உள்ளூா் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.