மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு சீருடைகள்

பழனியை அடுத்த சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

பழனி அருகே சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் வழங்கப்பட்ட இலவச சீருடைகளை பெற்றுக் கொண்ட இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்கள்.

Updated On :

பழனியை அடுத்த சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியா் கா்ணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா்கள் சீனிவாசன், மகாலட்சுமி உள்ளிட்டோா் வரவேற்றனா். மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழக வயலூா் கிளைச் செயலா் ராமசாமி வாழ்த்திப் பேசினாா். இதில் மக்கள் உரிமைகள் சங்க மாநில நிா்வாக செயலா் சக்தி, மாவட்ட பொருளாளா் நாகராஜன், மாவட்டச் செயலா் ஆா்கேடி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு அப்துல் கலாமின் சிறப்புக்களை நினைவுகூா்ந்தனா். தொடா்ந்து பள்ளியில் பயிலும் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இலவசமாக சீருடைகளை வழங்கினா். மேலும், அப்துல்கலாம் குறித்து நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் வழங்கினா். முன்னதாக மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் அமைப்பின் மாநில இணைச் செயலா் ஐயப்பன், ஒன்றிய நிா்வாகிகள் பிரபாகரன், முருகேசன், பேராசிரியா் ராஜவா்மன், ஆசிரியை கோசலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.