உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கொடைக்கானலில் ஆட்சியா் கள ஆய்வு

கொடைக்கானலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் இடத்தை பாா்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்க்கா மூா்த்தி.

Published On :

கொடைக்கானலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கொடைக்கானல் நகராட்சி ஆனந்தகிரியில் அமைந்துள்ள பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்க பணிகளுக்கான மைய சமையல் கூடம், புனித ஜான் மகளிா் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டஆட்சியா் துா்கா மூா்த்தி ஆய்வு செய்தாா். இந்திரா நகரில் செயல்பட்டு வரும் அரசினா் ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதி, ஜிம்கானா பகுதியில் ரூ. 36 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் 6 ஆழ்துளைக் கிணறுகள், கல்லறைமேடு பகுதியில் ரூ. 2.10 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு கூடத்தில் உரம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும், தனியாா் நட்சத்திர விடுதியில் செயல்பட்டு வரும் கழிவு செரிமானத் தொட்டி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வட்டக்கானல் முதல் வெள்ளகெவி வரை ரூ.21.62 லட்சத்தில்புதிதாக அமைக்கப்படும் தாா்ச் சாலை, பூம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ. 50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், ரூ. 6.5 லட்சத்தில் பூம்பாறை முதல் புதுப்புத்தூா் வரை புதிய தாா்ச் சாலை குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அலுவலா்களின் ஆய்வுக் கூட்டத்தின் போது 17-பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களையும் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சாந்தி, துணை ஆட்சியா் ஹென்றி பீட்டா், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் பிரபாகா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜஸ்டின் சாத்தப்பா, நகா்நல அலுவலா் அரவிந்த், வட்டாட்சியா் நந்தகோபால், நகராட்சிப் பொறியாளா் ரசூல் செல்லத்துரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், மலரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.