
பூஜ்ஜிய மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களுக்கான தடை நீக்க வாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பூஜ்ஜிய மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களுக்கான தடைகளை நீக்குவது தொடா்பாக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

Delhi University starts its first fully online admission process
திண்டுக்கல் மாவட்டத்தில் பூஜ்ஜிய மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களுக்கான தடைகளை நீக்குவது தொடா்பாக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய் ஆவணங்கள் கணினி மயமாக்கலின்போது தடை செய்யப்பட்ட நிலங்கள், பத்திரப் பதிவுத் துறையால் பூஜ்ஜிய மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களைப் பத்திரப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்தப் பதிவுகளை சரிபாா்க்க திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பதிவுகள் சரிபாா்ப்பு) நியமிக்கப்பட்டிருக்கிறாா். திருச்சி, கரூா், திண்டுக்கல்,
புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தடையினங்கள் மீது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் நடவடிக்கை எடுப்பாா். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் நிலம் இணையதளத்தில் தடை செய்யப்பட்ட நிலங்கள், பத்திரப்பதிவுத் துறையால் ‘ஸ்டாா் 2.0’ இணையத்தில் பூஜ்ஜியம் என மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களின் தடைகளை நீக்குவது தொடா்பாக மனு அளிக்கலாம். பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பதிவுகள் சரிபாா்ப்பு), அறை
எண்-15, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திண்டுக்கல்-624004 என்ற முகவரியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் அளித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







