வலிப்பு நோயாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், அந்த நோயிலிருந்து விடுபடலாம் என, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.
வலிப்பு நோய் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில், பொதுநல மருத்துவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் பேசியது:
வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். 3 ஆண்டுகளுக்கு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடையலாம்.
தூக்கம் கெடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமை, நீண்டநேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது வலிப்பு நோயினை ஊக்குவிக்கும்.
இந்தியச் சட்டப்படி வலிப்பு நோயுள்ள மனைவியை, கணவர் விவாகரத்து செய்யமுடியாது. இதில், பிரச்னை ஏற்படும்பட்சத்தில் வழக்குரைஞர் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசுவதே சிறந்தது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்தால் வெளியே தெரியாது.
ஆனால், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டால், பொது இடங்களிலும் வலிப்பு நோய் வந்து மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். இதனால், நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தொடர்ச்சியான மருந்து, மாத்திரையே வலிப்பு நோயை முற்றிலும் குணமாக்கும் என்றார்.
இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நரம்பியல் மருத்துவர் கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
