மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 16,586 பெண்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.78.77 கோடியில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.
மதுரை மாநகராட்சி சார்பில் 346 ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கி, மேயர் பேசியதாவது: மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 16,586 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.61.19 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம் திட்டத்தில் ரூ.17.58 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவித் திட்டத்தில் மட்டும் மொத்தம் ரூ.78.77 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி பேசுகையில்,மாநகராட்சி சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்துள்ள ஏழைப் பெண்களுக்கு நிதியுதவியாக இதுவரை ரூ. 96.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் துணைமேயர் கு.திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


