மதுரை மாவட்ட அளவிலான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து தொடங்கிவைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் மற்றும் விளையாட்டுப் பிரிவு அலுவலர்கள் போட்டிகளை நடத்தினர்.
போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், பந்துகள் எறிதல், நீளம், அகலம் தாண்டுதல் என நடந்த பல போட்டிகளில் மதுரை மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளில் பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசமுடியாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், உடல் குறைபாடுடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
போட்டியில் வென்றவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கும், அதில் வெல்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் அனுப்பிவைக்கப்படுவர் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.